திருமண வீடுகளில் தேடுவதுபோல் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் தேடுகிறார்: சொல்கிறார் அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலைதிருமண வீடுகளில் தேடுவதுபோல் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் தேடுகிறார்: சொல்கிறார் அண்ணாமலை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்காமல் புறக்கணிப்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு வருத்தம் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘’ பிரதமர் மோடி யாரும் செய்திட முடியாத சரித்திர சாதனையை செய்துள்ளார். உலக நாடுகள் வியக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளது.

எங்கே மோடி, எங்கே மோடி என்று திருமண வீடுகளில் தேடுவது போல் பிரதமர் நரேந்திரமோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடும் அளவிற்கு வலிமைமிக்க தலைவராக மோடி உயர்ந்துள்ளார்.

தமிழை வளர்க்க வேண்டுமென மோடி நினைக்கிறார். ஆனால் இங்கிருப்பவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இருந்த தமிழ் பாடப்பிரிவுகளையே நீக்குகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வருத்தம் தான்.

கொரோனா காலகட்டத்தில் சர்வதேச நாடுகள் கூட பயந்து பின் வாங்கியது. ஆனால் இந்தியா அந்த இக்கட்டான காலக்கட்டத்தை சிறப்பாக கையாண்டது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா ஒரு படி மேலே சென்றுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in