
அரசு ஊழியர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தங்களுக்கு தமிழக அரசு நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், ‘’ திமுக தேர்தலின் போது பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும், சிறப்பு தொகுப்பூதியம் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறியது. ஆனால் தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக அரசு, நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து ஏப்.19-ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’’ என தெரிவித்துள்ளனர்.