வெள்ளத்தால் பாதித்த வீடுகளை சீரமைக்க ரூ 45.84 கோடி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் பாதிப்பு
மிக்ஜாம் புயல் பாதிப்பு

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.45.84 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பெய்த மழை வெள்ளத்தால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அதுபோல அதிதீவிர கனமழையால் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உணவுக்கும், தங்குவதற்கும் பாதுகாப்பான இடம் இன்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். முக்கியமாக, மழை வெள்ளத்தில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி வீணாகின.

இடிந்து கிடக்கும் வீடுகள்
இடிந்து கிடக்கும் வீடுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மழை வெள்ள பாதிப்புக்கு ஏற்ப குடும்பத்துக்கு ரூ.6000 அல்லது ரூ.1000 நிவாரணமாக தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்வதற்காக தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 955 வீடுகளை பழுதுநீக்கம் செய்யவும், புதிய வீடுகள் கட்டவும் ரூ.24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க ரூ.21.62 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதியாக சேதமைடந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதியதாக கட்ட ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பேச்சுவார்த்தையில் சுபம்... அதிமுக - தேமுதிக நாளை ஒப்பந்தம் கையெழுத்து!

அதிர வைக்கும் வீடியோ... தண்டவாளத்தில் நின்ற ரயில் பற்றி எரிந்ததால் பரபரப்பு!

2 தொகுதிகள் நிச்சயம்... இரட்டை இலை தரப்பில் மதிமுகவுக்கு தூது!

மக்களவைத் தேர்தல்... தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

'கருக்கலைப்பு பெண்களின் உரிமை...' முதல் நாடாக சட்ட மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in