அமைச்சர்  எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலு

தமிழ்நாட்டுக்கு சுங்கச்சாவடிகளே தேவையில்லை; சட்டமன்றத்தில் எ.வ.வேலு காட்டம்

தமிழ்நாட்டுக்கு சுங்கச்சாவடிகள் தேவையில்லை என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில்  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று பதில் அளித்தார்.   

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதன்காரணமாக தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதப்பட்டு வருகிறது.  ஏழு மீட்டர் அகலம் உள்ள மாநில நெடுஞ்சாலையை சற்றே அகலப்படுத்தி 10 மீட்டர் ஆக மாற்றி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி வருகின்றனர்.  இதற்கு எதற்கு சுங்கச்சாவடி? அதனால் சுங்கச்சாவடிகளே தேவையில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in