நீட் விலக்கு! சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க, முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், “நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் தமிழ்நாடு. 2006-ம் ஆண்டு டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்பு சட்டப்படி செல்லும் என்று 2006-ல் ஒன்றிய அரசு தெரிவித்தது. நுழைவுத்தேர்வை ஒழிக்கும் சட்டத்தை 2006-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினேன். கடந்த ஜனவரி 11-ம் தேதி பிரதமரிடமும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி காணொலி மூலம் வலியுறுத்தினேன். நீட் விலக்கு சட்டப்பேரவையினுடைய 8 கோடி தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் முன்பே ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை. ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூக நீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டும். அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த உங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in