`தமிழக அரசின் முன்னெச்சரிக்கைதான் காரணம்'- முதல்வரை திடீரென பாராட்டும் அன்புமணி

`தமிழக அரசின் முன்னெச்சரிக்கைதான் காரணம்'- முதல்வரை திடீரென பாராட்டும் அன்புமணி

`மேன்டூஸ் புயலால் மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்' என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த மேன்டூஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. ஆனால் இந்த புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். தமிழக அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு காரணம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். புயலால் இதுவரை 4 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், `கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மேன்டூஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்.

மேன்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்; மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in