ஆளுநர் மாளிகை முன்பு தமிழ் தேசியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக செப்.11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன்.
பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி திரித்துக்கூறியதைக் கண்டிக்கும் வகையில், செப்.4-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் செப்.11-ம் தேதி காலை 10 மணியளவில் அந்த ஆர்ப்பாட்டம் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும். இதில் அனைத்து தமிழ் தேசிய அமைப்புகள், அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in