சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால்.?:தமிழக ஆளுநர் வேதனை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால்.?:தமிழக ஆளுநர் வேதனை

சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால், நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது, கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்வது வருத்தமளிக்கிறது’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மோடி @ 20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் மற்றும் மோடி-சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள் ஆகிய 2 புத்தகங்களை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘’ உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். அந்த மொழியில் இந்த இரண்டு புத்தகங்களை வெளியிடுவது பெருமையாக உள்ளது. அம்பேத்கர் சிறந்த தேசியவாதி, சமூகவாதி. பட்டியலின மக்களுக்காக அவர்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர்.

பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன், இன்றைக்கு அவரை அரசியலுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது வருத்தமாக உள்ளது. அவர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை மட்டுமல்ல, சமூக அவலங்களுக்காக முன் நின்றவர்.

பட்டியலின பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது, கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது.

பிரதமர் மோடி இந்திய நாட்டின் மக்களை தனது குடும்பமாக பார்க்கிறார். அவரின் செயல்பாடுகள் வியப்படைய வைத்துள்ளது. உலக நாடுகல் உற்று நோக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in