காங்கிரஸ் கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்கே திருப்பியளிக்க சட்ட ஆலோசனை... பிரதமர் மோடியின் புது உத்தரவாதம்!

மோடி
மோடி

காங்கிரஸின் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட ஏழை மக்களின் பணத்தை எவ்வாறு அவர்களுக்கே திருப்பித் தருவது என்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திராவின் வேமகிரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ ஊழல் செய்பவர்கள் ஏன் காங்கிரஸின் 'முதல் குடும்பத்துடன்’ நெருக்கமாக இருக்கிறார்கள். ஒரு தொழிலாளியின் வீட்டை ஊழலின் குடோனாக ஆக்கிவிட்டார்கள். இதற்கு முன்பும் ஜார்க்கண்டில் ஒரு எம்.பி.யிடம் ஒரு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே இது முதல் முறையல்ல. இவர்களிடம் இயந்திரங்கள் கூட எண்ணிச் சோர்வடையும் அளவுக்கு பெரிய தொகை இருந்தது.

ஜார்க்கண்டில் கைப்பற்றப்பட்ட பணம்
ஜார்க்கண்டில் கைப்பற்றப்பட்ட பணம்

ஜார்க்கண்டில் கைப்பற்றப்பட்ட பணம் எங்காவது சப்ளைக்காக வைக்கப்பட்டதா, காங்கிரஸின் முதல் குடும்பம் கறுப்புப் பணக் கிடங்குகளை உருவாக்கியதா? என்பதை அறிய நாடு விரும்புகிறது. கறுப்புப் பணத்தைப் பிடிக்கும் போதெல்லாம், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் என்னை தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இருப்பினும், நான் கவலைப்பட்டது முறைகேடுகளைப் பற்றி அல்ல, ஆனால் ஏழைகளைப் பற்றித்தான். இந்த ஊழல்வாதிகள் அவர்களுடைய பணத்தைத்தான் கொள்ளையடித்தார்கள்.

மோடி
மோடி

இதுவரை, அமலாக்கத்துறை மட்டும் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும் மற்ற மத்திய ஏஜென்சிகள் பறிமுதல் செய்தது சேர்க்கப்பட்டால் இது அதிகமாக இருக்கலாம். யாரிடம் இருந்து இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதோ, அவர்களுக்கு இந்த பணத்தை எப்படி திருப்பித் தருவது என்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருகிறேன். ரூ.17,000 கோடி ஏற்கெனவே உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு ஏழையின் உரிமையும் பாதிக்கப்படாது, இது மோடியின் உத்தரவாதம்" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in