சாமியார் மீது நடவடிக்கை எடுங்க... உதயநிதிக்கு ஆதரவாக விசிக புகார் மனு!

சாமியார் மீது நடவடிக்கை எடுங்க... உதயநிதிக்கு ஆதரவாக விசிக புகார் மனு!

பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரமஹான்ஸ் ஆச்சார்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வடசேரி காவல்நிலையத்தில் விசிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை எடுத்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் நிர்வாகிகள் இன்று வடசேரி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், "தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இரும்பு வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அவருடைய தலையை வெட்டி கொண்டு வருவதற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரமஹான்ஸ் ஆச்சார்யா பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அமைச்சரின் மீது பொதுவெளியில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பரமஹான்ஸ் ஆச்சார்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in