அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி... காலையிலேயே அரசியல் களத்தில் பரபரப்பு

தடா பெரியசாமி
தடா பெரியசாமி

பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த தடா பெரியசாமி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

மாநிலம் முழுவதும் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சிகளின் தலைமை மீதான அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த 1992ம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பாலம் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியசாமி கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இவரை நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகி தடா பெரியசாமி
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகி தடா பெரியசாமி

இதைத் தொடர்ந்த கடந்த 1990ம் ஆண்டு தொல்.திருமாவளவனுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கினார். 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சியான திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் கருத்து வேறுபாடால் அக்கட்சியில் இருந்து விலகி 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004ம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், 2006ம் ஆண்டு வரகூர் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகி தடா பெரியசாமி
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகி தடா பெரியசாமி

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவின் தலைமை மீது கடந்த சில நாட்களாகவே பெரியசாமி அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in