ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தலைமுடியை வெட்டி அதிரவைத்த சுவீடன் பெண் எம்பி: திடீர் ஆவேசத்துக்கு என்ன காரணம்?

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தலைமுடியை வெட்டி அதிரவைத்த சுவீடன் பெண் எம்பி: திடீர் ஆவேசத்துக்கு என்ன காரணம்?

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் விவகாரம் தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரானில் அண்மையில் பள்ளி மாணவி ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் போது 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இரான் பெண்களுக்கு ஆதரவாகவும் ஹிஜாபுக்கு எதிராகவும் ஸ்வீடன் பெண் உறுப்பினர் தன் தலைமுடியை வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் சலானி, இரான் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று முழங்கியபடி தனது தலைமுடியை வெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பார்த்த அங்கிருந்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in