மக்களவை தேர்தல் எதிரொலி... தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தமிழகத்தில் இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தமிழகத்தில்  நெடுஞ்சாலைகளில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ம் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, பரனூர் ஆத்தூர் ஆகிய 7 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ரூபாய் 5 முதல் 20 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு  மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in