காலையில் சஸ்பெண்ட் வாபஸ்; மதியம் எம்எல்ஏ சீட் அறிவிப்பு... தெலங்கானா பாஜகவில் பரபரப்பு!

பாஜக வேட்பாளர் ராஜா சிங்
பாஜக வேட்பாளர் ராஜா சிங்

தெலங்கானாவில் முகமது நபிகள் குறித்து அவதூறு பேசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜா சிங்கின் இடைநீக்கம் இன்று காலை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கோஷாமஹால் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட முகமது நபிகள் குறித்த வீடியோ ஒன்றுக்கு தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்திருந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அவரை கைது செய்த மாநில அரசு சிறையில் அடைத்திருந்தது.

இது தொடர்பாக அக்கட்சி விளக்கம் கேட்டிருந்த நிலையில், உரிய விளக்கம் அளிக்காததால் ராஜா சிங்கை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டிருந்தது.

பாஜக வேட்பாளர் ராஜா சிங்
பாஜக வேட்பாளர் ராஜா சிங்

இதனிடையே தெலங்கானாவில் வருகிற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜா சிங் தனது விளக்கத்தை பாஜக மேலிடத்திற்கு அனுப்பி இருந்தார். அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்று காலை அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்து பாஜக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் வெளியாகி உள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் கோஷாமகால் தொகுதியில் இருந்து போட்டியிட ராஜா சிங்கிற்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த முடிவு அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in