`தூங்கப் போகிறேன்; தொந்தரவு செய்யாதீங்க'- உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக தலைவரின் கடைசி வார்த்தை

`தூங்கப் போகிறேன்; தொந்தரவு செய்யாதீங்க'- உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக தலைவரின் கடைசி வார்த்தை

தெலங்கானா பாஜக மூத்த தலைவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தெலங்கானா மாநில பாஜக தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் ஞானேந்திர பிரசாத். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் ஞானேந்திர பிரசாத் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஞானேந்திர பிரசாத் தனது தனி உதவியாளரிடம் தூங்கச் செல்வதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர் அவருக்கு உணவு வழங்க உதவியாளர் அறைக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உதவியாளர், அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பார்த்தபோது, ​​பிரசாத் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், ஞானேந்திர பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சில நாட்களாகவே அந்த இல்லத்தில் ஞானேந்திர பிரசாத் வசித்து வந்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in