'அவர் அப்பவே அப்படி, இப்ப கேக்கவா வேணும்?’: அண்ணாமலை குறித்து சூர்யா சிவா ட்விட்!

'அவர் அப்பவே அப்படி, இப்ப கேக்கவா வேணும்?’: அண்ணாமலை குறித்து சூர்யா சிவா ட்விட்!

சர்ச்சை ஆடியோ விவகாரத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சூர்யா சிவா நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில், " அவர் அப்பவே அப்படி, இப்ப கேட்கவா வேணும்?" என சூர்யா சிவா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் ஆகியோர் செல்போனில் ஆபாசமாகப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா கட்சி நிகழ்வில் பங்கேற்கத் தடை விதித்து, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விசாரணைக் குழு முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சூர்யா சிவா எனக்குத் தம்பி மாதிரி என்று டெய்சியும், டெய்சி எனக்கு அக்கா மாதிரி என சூர்யா சிவாவும் தெரிவித்தனர். மேலும் சூர்யா சிவா 6 மாதங்களுக்கு அவர் வகித்த ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலையில் நடவடிக்கையை சூர்யா சிவா ஏற்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை டிசிபியாக பணியாற்றியபோது, ஒரே காவல் நிலையத்தில் 71 போலீஸார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். நாளிதழில் வந்த இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த சூர்யா சிவா, " அவர் அப்பவே அப்படி, இப்ப கேக்கவா வேணும்? என் மேல் தலைவர் அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். மீண்டும் அவர் நம்பிக்கையைப் பெற்று மீண்டு வருவேன் . என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in