வைரலாகும் வீடியோ: உயிர் தப்பிய பிஆர்எஸ் கட்சி தலைவர்!

வாகனத்தில் இருந்து விழுந்த தலைவர்கள்
வாகனத்தில் இருந்து விழுந்த தலைவர்கள்

ஹைதராபாத்தில் தேர்தல் பேரணியின் போது பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் வேனில் இருந்து தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாகனத்தில் வரும் கே.டி.ராமராவ்  உளளிட்ட தலைவர்கள்
வாகனத்தில் வரும் கே.டி.ராமராவ் உளளிட்ட தலைவர்கள்

தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் உள்ளது. சந்திரசேகரராவ் முதல்வராக உள்ளார். தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் சிர்சில்லா தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூரில் இன்று அவர் வாகனப் பேரணியில் பங்கேற்றார்.

அப்போது வாகனத்தில் நின்றவாறு அவருடன் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் வாகனத்தில் நிற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பலகை உடைந்தது. இதனால் அதில் இருந்த கே.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். ஆனாலும், காயமின்றி கே.டி.ராமராவ் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in