பதவியைப் பறித்தாலும் பலம் காட்டும் சுரேஷ்ராஜன்!

சிலைத்திறப்பு விழாவில்...
சிலைத்திறப்பு விழாவில்...

குமரி மாவட்ட திமுக உள்கட்சித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் ஆதரவாளர்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டு, பெருவாரியான பொறுப்புகளை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மேயர் மகேஷின் ஆதரவாளர்களே கைப்பற்றி இருக்கிறார்கள். சுரேஷ்ராஜன் ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவர் மாவட்ட செயலாளராக இருந்தபோது அவரது பரிந்துரையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பழனி உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுரேஷ்ராஜனுடன் அணிவகுத்து வரும் திமுகவினர்...
சுரேஷ்ராஜனுடன் அணிவகுத்து வரும் திமுகவினர்...

இப்படியான சூழலில் தாழக்குடி பகுதியில், மறைந்த திமுக நிர்வாகி ஐயப்பனின் சிலை திறப்புவிழா இன்று நடந்தது. சுரேஷ்ராஜன் தான் சிலையைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாது முன்னாள் எம்பி-யான ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ-வான ராஜன், மாவட்டப் பொருளாளர் கேட்சன் உள்ளிட்டவர்களும் சுரேஷ்ராஜனுடன் கலந்துகொண்டது மனோதங்கராஜ் முகாமை மனக்குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in