கலக்கல் போட்டோ... கனிமொழி வீட்டில் உரிமையுடன் கூடிமகிழ்ந்த தோழிகள்!

ராசாத்தி அம்மாளுடன் கனிமொழி, சுப்ரியா சுலே,  டிம்பிள் யாதவ்
ராசாத்தி அம்மாளுடன் கனிமொழி, சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ்

திமுக மகளிர் உரிமை மாநாட்டுக்கு வருகை தந்த பெண் எம்.பிக்களில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் இருவர்,  அவரது வீட்டுக்கு சென்று ராசாத்தி அம்மாளுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமை மாநாடு சென்னையில் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில், மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இடதுசாரித் தலைவர் ஆனி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இவர்களில்  சுப்ரியா சுலேவும், டிம்பிள் யாதவும் கனிமொழியுடன் மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டுகிறவர்கள்; நாடாளு மன்றத்தில் கனிமொழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள்.  கனிமொழி பேசுகையில் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டால் படைதளபதி போல சுப்ரியா சுலே ஆவேசம் காட்டுவார். கனிமொழியின் பேச்சுகளை லோக்சபாவில் பாராட்டுவார். சென்னை மாநாட்டில் பேசும்போதும், “ முதல்வர் ஸ்டாலின் அண்ணா, துர்கா அண்ணி” என உரிமையோடு பேசினார் சுலே.

கனிமொழியுடன் சுப்ரியா சுலே
கனிமொழியுடன் சுப்ரியா சுலே

நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பிக்கு ஆதரவாக பேசியதையும் தம்மை சுற்றி எப்போதும் திமுக எம்பிக்கள்தான் இருப்பார்கள் எனவும் நெகிழ்ந்து பேசினார் அவர். அவரும் டிம்பிள் யாதவும் மகளிர் உரிமை மாநாடு முடிந்த பிறகு கனிமொழியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தியுடன் அன்பாக உறவாடி மகிழ்ந்து உணவருந்தி உள்ளனர். 

அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. சுப்ரியா சுலே, கனிமொழி, டிம்பிள் யாதவ் ஆகியோர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளுடன் அமர்ந்திருக்கின்றனர். ராஜாத்தி அம்மாளை அரவணைத்தபடி சுப்ரியா சுலே அமர்ந்திருக்க, அவர் தோள்மீது தலைவைத்து சாய்ந்தபடி கனிமொழி எம்பி போஸ் கொடுத்திருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் லாலுவின் மகள் மிசா பாரதியும் இடம் பெற்றிருந்தால் இன்னும்  கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என்ற பின்னூட்டங்களும் அதில் தூள் பறக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in