விஸ்வரூபம் எடுக்கும் எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு

விஸ்வரூபம் எடுக்கும் எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை 10 வாரங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை எஸ்.பி.வேலுமணி தெரிவிப்பதாகவும், இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்கக்கூடாது எனவும் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முழுமையான ஆதாரங்களை திரட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை 3 வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.