
செந்தில் பாலாஜி மீதான குற்றப்பிரிவு வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகாரை தமிழக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது. இதில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரானவர்கள் இந்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டனர். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “ ஏற்கெனவே 2 மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் வழங்க முடியாது. வேண்டுமானால் அதிகாரிகளே நேரில் வந்து எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என கேட்கட்டும்” என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எவ்வளவு கால அவகாசம் கேட்பது என்பது தொடர்பாக தமிழக அரசு தரப்புக்கு அரைமணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை 2 வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்த தீர்ப்பால் பரபரப்பு உருவாகியுள்ளது.