`3 நாட்களில் பதில் அளிக்கவும்'- ஈபிஎஸ் வழக்கில் ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

`3 நாட்களில் பதில் அளிக்கவும்'- ஈபிஎஸ் வழக்கில் ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நிறுத்தியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இன்னும் வேட்பாளர் என்ன நிறுத்தவில்லை.

ஓபிஎஸ் அணியினர் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக பாஜகவின் சிக்னலுக்காக அவர் காத்து இருக்கிறார். பாஜக போட்டியிடாத பட்சத்தில் தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்த ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்குள் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு விறுவிறுப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரியும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் தனது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மூன்று நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in