காங்கிரஸுக்கு ஆதரவா?; சபாநாயகர் அப்பாவு நகைச்சுவை: வானதி சீனிவாசன் அளித்த எமர்ஜென்சி பதில்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்காங்கிரஸுக்கு ஆதரவா?; சபாநாயகர் அப்பாவு நகைச்சுவை: வானதி சீனிவாசன் அளித்த எமர்ஜென்சி பதில்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருப்பு புடவை அணிந்து வந்துள்ளீர்களா? என சபாநாயகர் அப்பாவு எழுப்பிய கேள்விக்கு, எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த கருப்பு சேலையில் வந்தேன் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

ராகுல் காந்தி தகுதி இழப்பை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதனை அறியாத பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருப்பு நிற புடவை அணிந்து அவைக்கு வந்தார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி கேட்க முனைந்தபோது சபாநாயகர் குறுக்கீட்டு, ’’காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் வந்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் கருப்பு உடையில் வந்து விட்டீர்களோ என நினைத்தேன்’’ என நகைச்சுவையாக பேசினார்.

இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், ‘’எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த கருப்பு சேலையில் வந்தேன்’’ என கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in