யோகா தினம்: ஆச்சரியமூட்டிய அமைச்சர்!

மனோதங்கராஜ்
மனோதங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் அமைச்சர் மனோதங்கராஜ் செய்த யோகா பள்ளி மாணவர்களை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.

நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி முக்கிய அரசியல் ஆளுமைகளும் பொதுமக்களோடு சேர்ந்து யோகா நிகழ்வுகளில் பக்கெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் தனியார் பள்ளியொன்றில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டார்.

மாணவர்களோடு சேர்ந்து யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோதங்கராஜ், திடீரென தன் இருகைகளையும் தரையில் ஊன்றி, தன் உடலை மட்டும் உயர்த்தி யோகா செய்தார். யோகா மட்டுமன்றி சிலம்பாட்டக் கலையிலும் சிறந்த வீரரான மனோதங்கராஜ், யோகா, அடிமுறை, வர்மம் என தெக்கன் களரி வித்தையும் கற்றவர் ஆவார். மாணவர்கள் மத்தியில் வழக்கமான யோகாவோடு மட்டுமல்லாது, தன் கைகளை மட்டுமே தரையில் ஊன்றி, உடலை உயர்த்தி மனோதங்கராஜ் செய்த யோகாசனங்கள் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in