தமிழகத்தில் சூரியன் மறைந்து தாமரை மலரும்... தமிழிசை நம்பிக்கை!

தமிழிசை
தமிழிசை

"தமிழகத்தில் மழை பொழிவதால் இனி குளங்களில் நீர் நிரம்பி தாமரை மலரும்" என்று தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கே.கே நகரில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் வெளிப்படையாகவேத் தெரிகிறது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும். பொதுமக்கள் பயணிக்கும் அரசுப் பேருந்தில் கத்தி, அரிவாள், துப்பாக்கி ஆகியவை பயணம் செய்கிறது. மோசமான கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் மறுபடியும் தலை எடுத்துள்ளது. கொலை, கொள்ளை திருட்டு அதிகரித்துள்ளது. இதற்கு மாநில அரசு பதில் சொல்ல வேண்டும்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு (கோப்பு படம்)
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு (கோப்பு படம்)

டெங்கு, போலியோ போல சனாதனத்தை ஒழிப்பேன் என்றார்கள். ஆனால், டெங்குவை கூட அவர்களால் ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேங்கை வயல் குறித்து இதுவரைக்கும் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அதற்குள் சமூக நீதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதற்கிடையில், மற்றொரு இடத்தில் மாட்டுக்கழிவு தண்ணீரில் கலந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது. இவை அனைத்தும் தமிழக அரசின் 3 ஆண்டுகால தோல்வியாகும்.

தாமரை
தாமரை

தமிழகத்தில் கோடை வெயில் குறைந்து லேசான மழை பெய்து வருகிறது. சூரியன் மறைந்து விட்டது. மழை பொழிகிறது, இனி குளங்களில் தண்ணீர் நிரம்பும். எனவே, தாமரை கண்டிப்பாக மலரும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in