திடீரென டெல்லி சென்றார் ஆளுநர் ரவி: காரணம் என்ன?

திடீரென டெல்லி சென்றார் ஆளுநர் ரவி: காரணம் என்ன?

தமிழக ஆளுநர் 2 நாள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சரை அவர் சந்தித்து பேசுகிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை பலமுறை சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, 4 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் நலன் குறித்த மனுக்களை முதல்வர் வழங்கினார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அழுத்தமாக வலியுறுத்தினார்.

மேலும், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள், ஆளுநர் ரவியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வெளிநடப்பு, அமளி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாள் பயணமாக சென்றுள்ள அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்கு ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in