ரேஷன்கார்டு வைத்திருக்கும் 14.60 லட்சம் பேருக்கு திடீர் உத்தரவு

ரேஷன்கார்டு வைத்திருக்கும் 14.60 லட்சம் பேருக்கு  திடீர் உத்தரவு

ரேஷன் கார்டு வைத்திருக்கும் 14.60 லட்சம் பேருக்கு கூட்டுறவுத்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஐந்து வகையான ரேஷன்கார்டுகள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் 14 லட்சம் பேருக்கு வங்கிக்கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பொங்கலுக்கு செயல்படுத்த அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 2.20 கோடி அரிசி ரேஷன்கார்டு தாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக்கணக்கு இல்லை என அரசு கண்டறிந்துள்ளது. இந்த ரேஷன் கார்டுதார்கள் 1 வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கும் பணியை முடிக்குமாறு மண்டல துணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in