மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், " ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழிச் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும்.

அத்துடன் இச்சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்" என்றும் அந்த கடிதத்தில் உறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in