
'’சர்வாதிகார ஆட்சிக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு உலகெங்கிலும் ஏற்படும். சில சமயங்களில் முளையிலேயே கிள்ளி எறியவும் படும்’’ என இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
’மூடர் கூடம்’ திரைப்படத்தின் இயக்குநர் நவீன் அடிக்கடி அரசியல் தீயை பற்ற வைத்து வருகிறார். ஜக்கியின் கூடாரத்தில் திராவிட மாடல் அமைச்சருக்கு என்ன வேலை என கொந்தளித்த அவர், அண்மையில் ஈபிஎஸ் காலில் விழுந்த ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மீசையா இருந்தது என தனது அதிரடி கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ட்விட்டரில் வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா? என ஸ்டாலின், உதயநிதி புகைப்படத்தை போட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு இயக்குநர் நவீன் பதில் அளித்துள்ளார். அதில், ’’சர்வாதிகார ஆட்சிக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு உலகெங்கிலும் ஏற்படும். சில சமயங்களில் முளையிலேயே கிள்ளி எறியவும் படும்‘’ என சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்துள்ளார்.
இதற்கு திமுகவினர் இயக்குநர் நவீனுக்கு எதிராக ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.