`உங்களின் செயல் வெட்கக் கேடானது'- நிர்மலா சீதாராமனை சாடிய சுப்பிரமணியன் சுவாமி

`உங்களின் செயல் வெட்கக் கேடானது'- நிர்மலா சீதாராமனை சாடிய சுப்பிரமணியன் சுவாமி

"ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் இல்லாதது குறித்து கலெக்டரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியது வெட்கக் கேடாது" என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம் பிர்குர் எனும் இடத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய சென்றார். அப்போது, பிரதமர் மோடியின் படம் இல்லாததைப் பார்த்த நிர்மலா சீதாராமன், மாவட்ட கலெக்டரிடம் கடுமையாக நடந்து கொண்டார். நிர்மலா சீதாராமனின் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்தது ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியினர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் இல்லாதது குறித்து கலெக்டரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியது வெட்கக் கேடாது என்றும் இது குறித்து பொது விநியோகத்துறை அமைச்சரிடம் அவர் தெரிவித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in