‘அண்ணாமலை தனது பெயரை எழுதவே பெரியார் தேவைப்படுகிறார்’ - சு.வெங்கடேசன் விளக்கம்!

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

பெரியார், வீரமாமுனிவர் துணை இல்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலை தன் பெயரை எழுத முடியாது என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற மொழியுரிமை மாநாட்டில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய வெங்கடேசன், “அண்ணாமலை தன்னுடைய இனிஷியலில் போடும் ‘கே’ விற்கு இரட்டைச் சுழியை உருவாக்கியவர் வீரமாமுனிவர். அதற்கு முன்பாக ஒன்றைச் சுழி போட்டு அதற்கு மேல் ஒரு புள்ளி இருக்கும். வீரமாமுனிவர்தான் இந்த ஒற்றைச் சுழியின் மீது உள்ள புள்ளியை எடுத்துவிட்டு இரட்டைச்சுழியைப் போடும் முறையை அறிமுகப்படுத்தினார். அண்ணாமலையின் பெயரில் வரும் ‘ணா’ என்ற எழுத்தை உருவாக்கியவர் யார் என அவருக்குத் தெரியுமா? அதற்கு முன்பாக ‘ண’ எழுத்தைப் போட்டு விட்டு அதன் கீழ் ஒரு விலங்கு இருக்கும். அதைக் கழற்றியவர் தந்தை பெரியார். ‘லை’ என்ற எழுத்து ‘ல’ எழுத்தில் தும்பிக்கை போட்டு எழுதும் முறை இருந்தது. அந்த தும்பிக்கையை கழற்றியதும் பெரியார்தான்.

கே.அண்ணாமலை என நீங்கள் கையெழுத்துப் போடும் போது வீரமாமுனிவர் என்ற கிறித்துவரையும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும். ‘பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரை எழுதுவதற்குக் கூட அவர்களின் துணை வேண்டும். நாத்திகனும், கிறித்துவனும், ஆத்திகனும் கொடுத்த கொடைதான் தமிழ் என்பதை உங்கள் கட்சியின் பெயர் சொல்கிறது. ஆளுநர் ரவிக்குத் தமிழ் தெரியாது. ஆனால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது என அவருக்குத் தெரியும்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in