யாராவது அவருக்குப் புரிய வையுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பிற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு

நடிகை குஷ்பு
நடிகை குஷ்புயாராவது அவருக்குப் புரிய வையுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பிற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு

மாணவர்கள் பள்ளிக்கு குறைந்த நாட்கள் வந்தால் கூட ஹால் டிக்கெட் வழங்கலாம் என்ற அமைச்சர் அன்பில் மகேஷின் அறிவிப்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வினை அதிக அளவிலான மாணவர்கள் புறக்கணித்து வரும் நிலையில், 3 அல்லது குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும் அவர்களுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘’ மாணவர்கள் தேர்வைப் புறக்காணிக்காமல் இருக்க அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றால் யாராவது அவருக்குப் புரிய வையுங்கள், அதற்கு இது தீர்வாகது. அமைச்சரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையே விரும்பமாட்டார்கள்.

மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்படும். ஆசிரியர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். காலத்தின் தேவை மற்றும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து இதற்கு அது தீர்வாகாது என்பதை அமைச்சர் புரிந்து செயல்பட வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in