மாணவர்கள் பள்ளிக்கு 3 நாட்கள் வந்தாலும் தேர்வு எழுத அனுமதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்கள் பள்ளிக்கு 3 நாட்கள் வந்தாலும் தேர்வு எழுத அனுமதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

``ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும்" என்றுபள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது நேரடியாக பிளஸ் டூ தேர்வு எழுதுவதால் அவர்கள் பயத்தில் இந்த தேர்வை எழுதவில்லை என்று ஒரு பக்கம் காரணம் கூறப்படுகிறது. அவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத தமிழக பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுத வரவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம். மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in