பசும்பொன்னில் பரபரப்பு! இபிஎஸ் வாகனம் மீது கல், செருப்பு வீச்சு!

இபிஎஸ் வருகை எதிர்ப்பு
இபிஎஸ் வருகை எதிர்ப்பு

மரியாதை செலுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறியபோது, ’’சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’’ என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பலத்த பாதுகாப்புடன் இபிஎஸ் வாகனம்
பலத்த பாதுகாப்புடன் இபிஎஸ் வாகனம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திவிட்டு பசும்பொன் நினைவிடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அப்போது குளம் அருகே எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்றது. அந்தநேரத்தில், அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதிகுளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும்  இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியுள்ளனர்.

அவர்கள் வீசிய கல் மற்றும் செருப்பு இபிஎஸ் சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்தது. இதனையடுத்து இருவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மரியாதை செலுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறியபோது, சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in