மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தின் போது சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினார். அப்போது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘’ சேலம் மாநகராட்சி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.171 கோடி மதிப்பில் 28 தகைசால் பள்ளிகளும், ரூ.123 கோடி மதிப்பில் 15 மாதிரி பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in