`மக்களின் இல்லம்தேடி அரசின் சேவையை கொண்டு செல்ல நடவடிக்கை’- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்`மக்களின் இல்லம்தேடி அரசின் சேவையை கொண்டு செல்ல நடவடிக்கை’- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

’அரசின் திட்டங்கள் மற்றும் நிதித்துறைச் சார்ந்த செயல்பாடுகளை மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் மக்களைத் தேடி அரசின் சேவைகள் என்ற புதியத்திட்டம் தொடங்கப்படும்’ என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தின் போது சார்புக் கருவூலகங்கள் அமைப்பது குறித்துச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துப் பேசுகையில், ‘’நிதித்துறைச் சார்ந்து பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வந்த போதும் இன்னும் பல சீர்திருத்தங்களைச் செய்யவேண்டிய சூழல் உள்ளது. இதுத் தொடர்பாக நாளை மறுநாள் எனது மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும்.

அரசை மக்களும் அதிகாரிகளும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைச் செய்து வருகிறோம். ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். எங்கெல்லாம் கூடுதலாக இருக்கிறது குறைவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கருவூலம் சரியாகச் செயல்பட என்ன செய்ய வேண்டுமோ அதனை இந்த அரசாங்கம் செய்துக் கொடுக்கும்.

நிதி பற்றாக்குறையிலும், வருவாய் பற்றாக்குறையிலும் பல ஆண்டுகளாக அரசு இயங்கி வருகிறது. இந்தநிலையில் கையில் இருக்கும் நிதியை வைத்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குளங்கள், ஏரிகள் தூர்வார்வது, குடிநீர் பிரச்சினையைப் போக்குவது எனக் கவனம் செலுத்தப்படுகிறது. அதேவேளையில் அரசின் சேவைகளை அல்லது அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளை ஆன்லைன் வாயிலாகச் செலுத்துவது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகளவிலான பொதுமக்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். ஆன்லைனில் செய்ய முடியாதவர்களுக்கு நிதித்துறைச் சார்ந்த செயல்பாடுகள் மக்களின் இல்லம் தேடிக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in