பாஜகவின் வெறுப்பு அரசியலை கர்நாடக மக்கள் பொறுத்துக் கொள்ளவில்லை: சித்தராமையா சீற்றம்!

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான மக்களின் முடிவு என்றும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இது எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புவதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுக்கு எதிரான மக்களின் ஆணை. ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுவதற்கு அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. ஆனால் அவர்களால் மக்களின் நம்பிக்கையை வாங்க முடியவில்லை. மதச்சார்பற்ற தன்மைக்கு பாஜகவால் அச்சுறுத்தல் இருந்தது. மாநிலத்தில் வெறுப்பு அரசியல் இருந்தது. அதை கர்நாடக மக்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பாஜக அரசால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அவர்கள் எப்படி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

இந்த முடிவு மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோக்கிய வெற்றிப்படியாகும். பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக மத்தியில் தோற்கடிக்கப்படும் என்று நம்புகிறேன். மத்தியில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக ஆட்சி தேவை. கர்நாடகாவில் வெற்றிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உதவியது. அவர் பல மாவட்டங்களை உள்ளடக்கி முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினார். கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் செய்ததற்காக மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் ஜி ஆகியோருக்கு நன்றி" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in