தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் நிலை?- இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் நிலை?- இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி

6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பதிவுப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்து வருகின்றன. அதே நேரத்தில், மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பல கட்சிகள் தேர்தலில் தோல்வியை தழுவுகின்றன. இதனால், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தற்போது, அந்த கட்சிகளுக்கு செக் வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பதிவுப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்,

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என அறிவித்துள்ளது.

மேலும், 86 கட்சிகள் தற்போது இல்லை எனக்கூறி பட்டியலில் இருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in