ஸ்டாலின் எனது சகோதரரைப் போன்றவர்: சென்னையில் மம்தா பானர்ஜி பேட்டி

ஸ்டாலின் எனது சகோதரரைப் போன்றவர்: சென்னையில் மம்தா பானர்ஜி பேட்டி

ஸ்டாலின் எனது சகோதரரைப் போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினைச் சந்திக்காமல் எப்படி செல்ல முடியும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் 80-வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பில் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "தேர்தல், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் என மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறுகையில், " ஸ்டாலின் எனது சகோதரரைப் போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும்? இரண்டு கட்சி தலைவர்கள், அரசியலைத் தாண்டி வேறு விஷயங்கள் குறித்து பேசலாம். நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in