பள்ளி சிறார்களுக்கு உணவூட்டி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்: காலை உணவு திட்டம் மதுரையில் தொடக்கம்

பள்ளி சிறார்களுக்கு உணவூட்டி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்: காலை உணவு திட்டம் மதுரையில்  தொடக்கம்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று மதுரையில் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு உணவூட்டி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7-ம் தேதி 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது’ என்று அறிவித்தார்.

இதன்படி முதற்கட்டமாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று முதல் ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவூட்டி தொடங்கி வைத்தார். ரவா கேசரி, கிச்சடி, சட்னி என சுவை மிகுந்த உணவை அருகில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு அன்புடன் முதல்வர் ஊட்டி விட்டு அவர்களிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார். அதன் பின் அவரும் உணவருந்தினர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

முன்னதாக மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in