செஸ் ஒலிம்பியாட் மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு உயரும்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செஸ் ஒலிம்பியாட்  மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு உயரும்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

“பன்னாட்டு விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு 18 மாதம் ஆகும் என்பார்கள். ஆனால் நான்கே மாதத்தில் நாங்கள் நடத்திக் காட்டியிருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் வளர்ச்சி அடைய உள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் மேலும் மேலும் உயரும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாகச் சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடத்தலாம் என ஆலோசனைகள் நடைபெற்றதை அறிந்து இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற்றிட வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடந்த மார்ச் 16-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தும் விதமாக 18 துணைக் குழுக்களை அமைத்தேன். இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு 18 மாதம் ஆகும் என்பார்கள். ஆனால் நான்கே மாதத்தில் நாங்கள் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகத் துவங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் வளர்ச்சி அடைய உள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் மேலும் மேலும் உயரும். இந்த உயர்வு என்பது மிக சாதாரணமாகக் கிடைத்துவிடுவதல்ல. போர் மரபிற்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. அனைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in