காங்கிரஸ் அழைப்பு: கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

காங்கிரஸ் அழைப்பு: கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

நாளை மறுநாள் நடைபெறவுள்ள கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முடிவு எடுக்க முடியாமல் கடந்த 5 நாட்களாக காங்கிரஸ் தலைமை திணறி வந்தத நிலையில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் நாளை மறுநாள் பெங்களூரில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மம்தா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in