ஈபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுகிறார் ஸ்டாலின்: உதயகுமார் குற்றச்சாட்டு

ஈபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுகிறார் ஸ்டாலின்:  உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி  கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் பணியை மட்டுமே, முதல்வர் ஸ்டாலின் செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிக்கந்தர் சாவடியில் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில்,   பிப். 23-ல்  எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கும் 51 ஜோடிகளுக்கான  திருமண விழா அழைப்பிதழை கிளைச் செயலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  எம்எல்ஏ வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில்," திமுக அரசு  பொறுப்பேற்ற 19  மாத ஆட்சி  நிறைவில், எந்த திட்டத்தையும் மக்களுக்கு தரவில்லை என்பது தான் யதார்த்தம், களநிலவரம். ஜெயலலிதா  வழங்கி வந்த  திட்டங்களைப் பல்வேறு  காரணங்களைக் கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முடக்கி விட்டனர். முதியோர் ஓய்வூதிய திட்டத்தை படிப்படியாக  குறைத்து  வருகின்றனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம், பொதுக்கூட்டங்களில் எழுப்பும் கேள்விகளுக்கு  பதில் கூற அரசு  தயாராகவில்லை. 19 மாத திமுக ஆட்சியில்  உயர்த்திய சொத்து வரியை கட்ட முடியாமல் மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். மற்றொரு புறம் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியாக உள்ளது.

கல்வி நிறுவனங்களின்  வாசல் முன் போதைப் பொருட்கள் பயன்பாடு  அதிகரித்து வருகிறது.இவற்றிற்கு  முதல்வரிடம் எந்த பதிலும் இல்லை.  தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர்.  ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள்,  விவசாயிகள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமல்  போராடி வருகின்றனர்.  அரசின் நிர்வாக குளறுபடியால்,  அரசு திட்டங்களை மக்களிடம்  சேர்ப்பதில்  தோல்வி அடைந்துள்ளது.  தொலைநோக்கு பார்வையுடன்,  இந்த அரசு  செயல்படவில்லை. எடப்பாடி பழனிசாமி  கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் பணியை மட்டும்   முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in