பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எரியத்தானே செய்யும்?... ஹெச்.ராஜா பதிவால் சர்ச்சை!

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த கோஷம் ஒன்றும் ஆட்சேபகரமானது அல்ல என்றும், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும் என பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டமிழந்த ரிஸ்வான், பெவிலியன் திரும்பியபோது அங்கு திரண்டிருந்த இந்திய ரசிகர்கள், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றும் , விளையாட்டு என்பது வெறுப்பை பரப்பும் கருவியாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா, ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பாக எழுந்து வரும் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில் திமுகவினரை கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ’’பாரத நாட்டின் அரசியலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் ஶ்ரீராமரின் படம் உள்ளது. இன்றும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக உள்ளது.

ஆகவே ஜெய் ஶ்ரீராம் கோஷம் ஆட்சேபகரமானது அல்ல. மரியாத புருஷோத்தமன் ஶ்ரீராமர் நம்நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்? என பதிவிட்டுள்ளார். இந்த சர்ச்சை பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in