ஐயப்பனுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்த மேயர்!

டிராக்டரில் மகேஷ்...
டிராக்டரில் மகேஷ்...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் அண்மையில் இருமுடிகட்டி, விரதம் இருந்து சபரிமலை யாத்திரை சென்றார். அதன் தொடர் நிகழ்வாக, சபரிமலை சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு பொருள்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக தனது சொந்த செலவில் சபரிமலை தேவசம் போர்டுக்கு டிராக்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதை அவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்துவிட்டு, ‘ஏதோ பாஜகதான் இந்துக்களின் காவலன் என்பது போல் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களாப் பாத்தீங்களா... அவரும் தான் ஐயப்பன் கோயிலுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்’ என்று மகேஷுக்கு ஆதரவாக ஆன்மிக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள் நாகர்கோவில் உடன்பிறப்புகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in