சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? - பேரவையில் இபிஎஸ் கேள்வி!

சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? - பேரவையில் இபிஎஸ் கேள்வி!

ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள மசோதாக்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது, வழக்கின் தீர்ப்பு வருவதற்குள்ளாக சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை என்ன வந்துள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்த நிலையில், இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக இன்று சட்டமன்றக் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன். இதுத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது எதற்காக அவசர அவசரமாக சட்டப்பேரவைக் கூட்டம் வேண்டும் என்பதே என் கேள்வி’’ என்றார்.

இடையே குறுக்கீட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘’மசோதா நிலுவையில் இருப்பதாக அர்த்தம் இல்லை, அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அர்த்தம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ’’ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இபிஎஸ், ‘’அன்றைக்கே மறைந்த அம்மா அவர்கள் துணை வேந்தர்களாக முதல்வர் இருக்க வேண்டுமென சட்ட மசோதா கொண்டு வந்தார். அன்றைக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்காமல், இன்றைக்கு இப்படி ஒரு மசோதாவை கொண்டு வருவது, இரட்டை நிலைப்பாடாகாதா’’ என்றார். குறுக்கீட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’ அப்போது இருந்த ஆளுநர்கள் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அரசை கலந்தாலோசித்து தான் முடிவெடுப்பார்கள் அதனால் அப்போது இந்த மாதிரியான சட்ட மசோதா தேவைப்படவில்லை’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in