கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு... இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்

மகளிர்
மகளிர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காமல் இருப்பவர்களுக்காக  இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

விண்ணப்பத்திற்காக வரிசையில் காத்திருக்கும் மகளிர்
விண்ணப்பத்திற்காக வரிசையில் காத்திருக்கும் மகளிர்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்காக முதற்கட்ட முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது.  அந்த முகாம்களின் மூலம் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழங்கப்படும் விண்ணப்பம்
வழங்கப்படும் விண்ணப்பம்

இதன் தொடர்ச்சியாக  மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில்  பதிவு செய்ய தவறியவர்களுக்காக   விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

எனவே, இன்று முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு  முகாம்கள் மூலம் தகுதி வாய்ந்த பயனாளர்கள் அனைவரும் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in