பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு: தேர்தலுக்கான அறிவிப்பு என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்

மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு: தேர்தலுக்கான அறிவிப்பு என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில், கர்நாடக மாநிலத்தில் பாசனம் மற்றும் குடிநீர்திட்டங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், கர்நாடக மாநில விவசாயிகளின் வறட்சிக்காக ரூ.5,300 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படவுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கர்நாடகாவுக்கான சிறப்பு நிதி அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டபோது, இது தேர்தலுக்கான அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது, தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா மட்டும்தான். இந்த மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பலமான நிலையில் உள்ளது. எனவே எப்படியாவது மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான முக்கிய முயற்சியாக இந்த பட்ஜெட் சிறப்பு நிதி ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in