`சாதியை பெருமையோடு வெளியே சொல்வது அவமானம்'- கனிமொழி எம்பி காட்டம்

`சாதியை பெருமையோடு வெளியே சொல்வது அவமானம்'- கனிமொழி எம்பி காட்டம்

"சாதியை பெருமையோடு வெளியே சொல்வது அவமானம் என்று நினைக்கக் கூடிய இடத்திற்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள்" என்று திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் சென்னை தி.நகரில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்று பேசுகையில், "நாட்டில் இன்னும் சாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் ஒரு பெயரை கேட்டால் சாதியின் அடையாளம் இருக்கும். தமிழ்நாட்டில் பெயரை வைத்து சாதிய முடிவு செய்ய முடியாது. நம்முடைய பல ஐஏஎஸ் அதிகாரிகள் வெளி மாநிலங்களில் வேலை செய்யும்போது தங்கள் பெயரை மற்றவர்கள் கேட்கும்போது சாதியை எங்கே சொல்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.

தமிழன் என்று தெரியும். ஆனால் எந்த சாதிக்குள் நம்மை அடைக்க முடியும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு நாம் சாதியை கடந்து வந்திருக்கிறோம். சாதியை பெருமையோடு வெளியே சொல்வது அவமானம் என்று நினைக்கக் கூடிய இடத்திற்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள். அந்த சாதனை திராவிட இயக்கத்தின் சாதனை. ஆனால் தமிழகத்தில் நாம் கடந்து செல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சாதியின் பெயரால் யார் யாருக்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோ, ஆண், பெண் வித்தியாசத்தை சொல்லி யாருக்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். மறுக்கப்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டால் நன்றாக படிக்கிற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பதை மறுபடியும் மறுபடியும் அழுத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான மெரிட் என்றால் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த உண்மையான மெரிட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in