ஓபிஎஸ் குறித்த அதிமுக கொறடா வேலுமணியின் கோரிக்கை... சபாநாயகர் முடிவால் பரபரப்பு!

ஓபிஎஸ் குறித்த அதிமுக கொறடா வேலுமணியின் கோரிக்கை... சபாநாயகர் முடிவால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் எக்கட்சியையும் சாராதவர்கள் என அறிவிக்கும்படி சபாநாயகரிடம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. முன்னதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் சந்தித்தனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதன்படி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நான்கு பேரையும் எந்த கட்சியையும் சாராதவராக அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இதுத் தொடர்பாக ஆலோசித்து முடிவெடிக்கப்படும் என்றும், தற்போது நடைபெற்று வரும் சிறப்புக்கூட்டத் தொடரில் இதுகுறித்து விவாதிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ முடியாது என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in